உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வினாடி வினா போட்டிகள் 

வினாடி வினா போட்டிகள் 

விருதுநகர்:   மாவட்ட இளைஞர் நல அலுவலர் காவ்யா முத்துலெட்சுமி செய்திக்குறிப்பு: மத்திய அரசின் இளைஞர் நலன், விளையாட்டு துறை சார்பில் நடக்கவுள்ள விக்‌ஷித் பாரத் யங் லீடர்ஸ் டயலாக் 2027ஐ முன்னிட்டு மை பாரத் மூலம் இணையதளம் வழியாக வினாடி வினா போட்டி நடத்தப்படும். இதில் 15 வயது முதல் 29 வயது வரை இளைஞர்கள், விக்‌ஷித் பாரத் சேலஞ்ச் ட்ராக் எனப்படும் முதலாவது சுற்றில் முதலில் வினாடி வினா போட்டியும், அதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்த கட்டங்களில் கட்டுரை, ஓவியம், நடனம் உட்பட பல போட்டிகள் நடக்கிறது,  எனவே செப். 30ல் நடக்கும் இப்போட்டியில் பங்கேற்க இளைஞர்கள் MyBharat.gov.inஎன்ற  இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்