உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ராஜபாளையத்தில் 24 மணி நேரத்தில் 64 பேரை கடித்த வெறிநாய்

ராஜபாளையத்தில் 24 மணி நேரத்தில் 64 பேரை கடித்த வெறிநாய்

ராஜபாளையம்:விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சுற்று பகுதியில் ஒரே வெறிநாய் கடித்ததில் 24 மணி நேரத்திற்குள் 6 மாணவர்கள் உட்பட 64 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.ராஜபாளையம் சுற்று பகுதிகளில் ஒவ்வொரு தெருவிலும் நாய்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் சமுசிகாபுரம், சங்கரபாண்டியபுரம், வ. உ.சி நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றி திரிந்த ஒரு நாய் விரட்டி கடித்ததில் 3 பள்ளி மாணவர்கள் உட்பட 30 பேர் சத்திரப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றனர்.நேற்று காலை 7:00 மணி முதல் 10:00 மணி வரை ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட், சங்கரன்கோவில் முக்கு, காந்தி சிலை பகுதிகளில் பஸ்சுக்காக நின்றிருந்தவர்கள், கூலி தொழிலாளர்கள் ,மாணவர்கள் உள்ளிட்ட 34 பேரை ஒரே வெறி நாய் கடித்துள்ளது. கடிபட்டவர்கள் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். தகவல் அறிந்து சுகாதாரத் துறையினர் நாயை பிடித்து அப்புறப்படுத்தினர்.24 மணி நேரத்திற்குள் 6 மாணவர்கள் உட்பட 64 பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டதும் இரண்டு சம்பவங்களிலும் கழுத்தில் பட்டை கட்டப்பட்டிருந்த நாய் என்பதால் வளர்ப்பு நாய் வெறி பிடித்து கடித்திருக்கலாம் என தெரிகிறது.சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பாபுஜி கூறுகையில், 'சத்திரப்பட்டி அருகே 30 பேர் , ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் 34 பேர் நாய் கடி பாதிப்புக்கு சிகிச்சை பெற்றனர்.அவர்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி, நோய் எதிர்ப்பு சக்தி ஊசி செலுத்தப்பட்டுள்ளது.மருத்துவ குழுவினர் முகாமிட்டு ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை