உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விருதுநகரில் வெப்பத்தை தணித்த மழை

விருதுநகரில் வெப்பத்தை தணித்த மழை

விருதுநகர்: மாவட்டத்தில் சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில் நேற்று விருதுநகர், கிருஷ்ணன் கோவில், ஸ்ரீவில்லிப்புத்துாரில் மாலையில் கனமழை பெய்தது. மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னதாக துவங்கியதால் மழையை நம்பி விவசாயிகள் சோளம், கம்பு உள்பட பல்வேறு பயிர்வகைகளை நடவு செய்தனர். ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு மழை பெய்யவில்லை. கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வாட்டி வதைத்தால் மக்கள் பகலில் வெளியே வருவதற்கு தயங்கினர். மாலையில் வந்து வீடுகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர். நேற்றும் வழக்கம் போல பகலில் வெயில் வாட்டி வதைத்த நிலையில் மாலையில் காரியாபட்டி, அருப்புக்கோட்டை, ராஜபாளையம் பகுதிகளில் சாரல் மழை இடி, மின்னலுடன் பெய்தது. விருதுநகரில் நேற்று மாலை 5:30 மணிக்கு மேலும், கிருஷ்ணன் கோவில், ஸ்ரீவில்லிப்புத்துார், அதனை சுற்றிய பகுதிகளில் நேற்று மாலை 6:00 மணிக்கு மேல் இடி, மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் நகர், ஊரகப்பகுதிகளில் ரோடுகளில் கழிவு நீர் தேங்கி வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். சாத்துார், சிவகாசியில் மழை மேகங்கள் மட்டும் தென்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை