உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / குளிர்ந்த காற்றுடன் மழை

குளிர்ந்த காற்றுடன் மழை

விருதுநகர்: அருப்புக்கோட்டை, விருதுநகர், காரியாப்பட்டி, அதனை சுற்றிய பகுதிகளில் நேற்று காலையில் இருந்தே கருமேக கூட்டங்கள் திரண்டு காணப்பட்டது. இதையடுத்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி சாரல் மழை இரவு வரை பெய்தது. அதே போல சிவகாசி, திருத்தங்கல், சாத்துார், சுற்றிய பகுதிகளில் மதியத்திற்கு மேல் சாரல் மழை பெய்தது. மேலும் ஸ்ரீவில்லிப்புத்துார், ராஜபாளையம் பகுதிகளில் சாரல் மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாகவே குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. நேற்று காலையில் இருந்தே குளிர்ந்த காற்றுடன் மழை பெய்ததால் இதமான சூழ்நிலையாக மாறியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை