உள்ளூர் செய்திகள்

 மழைநீர் தேக்கம்

விருதுநகர்: விருதுநகர் புது பஸ் ஸ்டாண்ட் அருகே எம்.ஜி.ஆர்., ரோட்டில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மதுரை - கன்னியாகுமரி நான்குவழிச் சாலையில் இருந்து புது பஸ் ஸ்டாண்ட் வந்து செல்லும் முக்கிய வழியாக எம்.ஜி.ஆர்., ரோடு உள்ளது. இங்கு சீரமைப்பு பணிக்காக ரோடு தோண்டப்பட்டது. அதில் மழைநீர் தேங்குவதுடன் சேறும் சகதியுமாக மாறியுள்ளது. இதனால் சீரமைப்புப் பணி தடைபட்டுள்ளது. இந்நிலை 3 மாதங்களுக்கு மேலாக நீடிப்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளா கின்றனர். ரோட்டை சீரமைக்க மாவட்ட நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !