உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சிவகாசி ஜெ நகரில் வீடுகளை சூழ்ந்த மழைநீர்: மக்கள் அவதி

சிவகாசி ஜெ நகரில் வீடுகளை சூழ்ந்த மழைநீர்: மக்கள் அவதி

சிவகாசி : சிவகாசி மாநகராட்சி 48 வது வார்டு ஜெ நகரில் வீடுகளை தண்ணீர் சூழ்ந்ததோடு பாதையும் சகதியாக மாறியதால் குடியிருப்புவாசிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.சிவகாசி மாநகராட்சி 48 வது வார்டு ஜெ நகரில் 6 க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. பாதி தெருக்களில் ரோடு போடப்படவில்லை. இப்பகுதியில் பெய்த தொடர் மழையால் வீடுகளை தண்ணீர் சூழ்ந்து விட்டது. மேலும் ரோடு இல்லாத பாதைகள் அனைத்துமே சகதியாக மாறிவிட்டது. கொசு உற்பத்தியாகி குழந்தைகள், பெரியவர்கள் தொற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர். ஏற்கனவே போடப்பட்ட ரோடும் சேதம் அடைந்துவிட்டது.எனவே இப்பகுதியில் உடனடியாக தெருக்களில் ரோடு போட வேண்டும், மழை நீர் வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடியிருப்புவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை