ஸ்ரீ ரமண பள்ளிகளில் மாணவர் வழிகாட்டுதல் நிகழ்ச்சி
ராஜபாளையம் : ராஜபாளையம் ஸ்ரீ ரமண வித்யாலயா, ஸ்ரீ ரமண அகாடமி சி.பி.எஸ்.இ பள்ளிகளில் பிளஸ் 1 மாணவர்களுக்கு வழிகாட்டு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தாளாளர் கிருஷ்ணவேணி கண்ணன் தலைமை வகித்தார் ஆலோசகர் டாக்டர் கு.கணேசன் முன்னிலை வகித்தார். மாணவி பிரதஷ்சனா வரவேற்றார். பள்ளி மேனேஜிங் டிரஸ்டி கோகுல் கண்ணன் இன்றைய முயற்சிகள் நாளைய சாதனைகள் என்ற தலைப்பில் பேசினார். விருது பெற்ற ஆசிரியை மகாலட்சுமிக்கு பாராட்டு, ஆண்டு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை முதல்வர்கள் சுதா, கல்யாணி பள்ளி நிர்வாக அலுவலர் காமராஜ் தலைமையில் உடற்கல்வி இயக்குனர் செந்தாமரைக்கண்ணன், அலுவலர்கள் கணேசன், முனீஸ்வரன் உள்ளிட்ட ஆசிரியர்கள் செய்திருந்தனர். ஆசிரியை புவனேஸ்வரி தொகுத்து வழங்கினார். மாணவி சுவாஷ்திகா நன்றி கூறினார்.