உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ரேஷன் குறைதீர் முகாம்

ரேஷன் குறைதீர் முகாம்

ராஜபாளையம் : ராஜபாளையம் வட்டார ரேஷன் காடுதாரர்களுக்கான சிறப்பு குறைதீர் முகம் தாசில்தார் அலுவலகத்தில் நடந்தது. குடிமை பொருள் தனி தாசில்தார் ஆனந்தராஜ் தலைமை வகித்தார். இதில் அலைபேசி எண் மாற்றம், குடும்ப உறுப்பினர் பிறந்த தேதி, பெயர் திருத்தம், பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் என மொத்தம் 56 நபர்களிடம் மனுக்கள் பெறப்பட்டு உடனடி தீர்வு காணப்பட்டது. ஆர்.ஐ., பால மணிகண்டன் உள்ளிட்ட அலுவலர்கள் உடன் இருந்தனர். மேலும் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பயன்பெறும் முன்னுரிமை குடும்ப அட்டைகள் மற்றும் 'அந்தியோதயா அன்ன யோஜனா' குடும்ப அட்டைதாரர்கள் அனைத்து உறுப்பினர்களும் தங்களது விரல் ரேகையை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அனைவரும் தாங்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகே உள்ள ரேஷன் கடைகளில் விரல் ரேகையை பதிவு செய்து கொள்ளலாம் என ஆனந்தராஜ் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ