உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு  சந்தி சிரிக்கிறது ஆர்.பி., உதயகுமார் காட்டம்

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு  சந்தி சிரிக்கிறது ஆர்.பி., உதயகுமார் காட்டம்

விருதுநகர் : தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என விருதுநகரில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி., உதயகுமார் தெரிவித்தார்.விருதுநகரில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி., உதயகுமார் பேசியதாவது: தி.மு.க., அரசு520 வாக்குறுதிகளை கொடுத்துதுாங்கிக்கொண்டிருக்கிறது. நீட் தேர்வு, கல்விக்கடன் ரத்து, 50 லட்சம் வேலை வாய்ப்புகள், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் 150 நாள்களாக உயர்த்த எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.சட்டசபையில் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்து விட்டது என அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி ஆதாரத்துடன் தெரிவித்தால் நேரலையை துண்டிக்கிறார்கள்.தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. கொலை, கொள்ளை, கற்பழிப்பு நடக்காத நாளே இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.தமிழக போலீசார்சுதந்திரமாக செயல்பட அனுமதி வழங்கப்படவில்லை. கொலை குற்றவாளிகள் ஸ்டேஷன் முன்பு உலாவிவருகின்றனர்.அரசியல் தலைவர்கள், வியாபாரிகள், பெண்கள், குழந்தைகளுக்கு பாதுாப்பு இல்லை. பாலியல் வன்முறை வழக்குகளை போலீசார் முறையாக கையாள வில்லை என உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மின்சாரம் கட்டணம் 3 தடவை, சொத்து வரி 6 சதவிதம் உயர்த்தியுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் உயர்த்த திட்டமிட்டுள்ளனர்.தி.மு.க., 75வது ஆண்டு பவள விழா கொண்டாடுகிறது. இவர்கள் 25 ஆண்டுகள் மட்டுமே ஆட்சியில் இருந்தனர். ஆனால் அ.தி.மு.க., 52 ஆண்டுகளில் 32 ஆண்டுகள் ஆட்சியில் இருந்துள்ளது.அமைச்சர் துரை முருகனின் பேரன் வயதில் இருப்பவரை துணை முதல்வராக்கியும், பதவியை காப்பாற்றுவதற்காக இன்ப நிதி வந்தாலும் ஏற்றுக்கொள்ளும் மன நிலையில் உள்ளார், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை