உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நல்லுக்குறிச்சி ஊருணியில் நாணல்கள்

நல்லுக்குறிச்சி ஊருணியில் நாணல்கள்

நரிக்குடி: நரிக்குடி நல்லுக்குறிச்சி ஊருணியில் நாணல்கள் வளர்ந்துள்ளதால் மழை நீரை தேக்குவதில் சிரமம் இருந்து வருகிறது. இதனை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.நரிக்குடி நல்லுக்குறிச்சியில் நிலத்தடி நீர்மட்டம் உயர, கால்நடைகள் பயன் பெற, விவசாய பணிகளுக்கு என 2 ஏக்கர் பரப்பளவில் ஊருணி வெட்டப்பட்டது. அப்பகுதியில் பெய்யும் மழை நீர், வரத்து ஓடைகள் வழியாக ஊருணிக்கு வரும். மழைக்காலங்களில் மழை நீரை தேக்கி வைத்து, கால்நடைகள், விவசாய பணிகளுக்கு பயன்படுத்தி வந்தனர். நாளடைவில் நாணல்கள் அடர்ந்து வளர்ந்து ஊருணி இருக்கும் அடையாளம் தெரியாமல் உள்ளது.நாணல்களுக்குள் காட்டுப்பன்றிகள், விஷ பூச்சிகள் தங்குகின்றன. சமீபத்தில் அப்பகுதியில் பலத்த மழை பெய்து பல்வேறு நீர்நிலைகள் நிரம்பிய நிலையில், ஊருணிக்கு வந்த தண்ணீரை தேக்க முடியாமல் வீணாக வெளியேறியது. தற்போது வறண்டு காணப்படுகிறது.விவசாயம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் புலம்புகின்றனர். கால்நடைகளுக்கு தண்ணீர் இல்லாமல் வளர்க்க சிரமப்படுகின்றனர். நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் சூழ்நிலை உள்ளது. எனவே வளர்ந்து நிற்கும் நாணல்களை அப்புறப்படுத்தி மழை நீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கிராமத்தினர் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை