உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சிவகாசியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சிவகாசியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சிவகாசி: சிவகாசி மாநகராட்சி புது ரோட்டு தெரு, பழைய விருதுநகர் ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகள் மாநகராட்சி சார்பில் அகற்றப்பட்டது.சிவகாசி புது ரோட்டு தெரு, பழைய விருதுநகர் ரோட்டில் கடைகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகள் இருந்தன. இதனால் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டதோடு விபத்திற்கும் வழி வகுத்தது. இந்நிலையில் கமிஷனர் சரவணன், மாநகர திட்டமிடுநர், மதியழகன், ஆய்வாளர் சுந்தரவள்ளி, மேற்பார்வையாளர் முத்துராஜ் தலைமையில் இப்பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகள் மணல் அள்ளும் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது. இதனால் வாகனங்கள் எளிதில் சென்று வர வழி ஏற்படுத்தப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.மேற்பார்வையாளர் காயம்: மணல் அள்ளும் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றும் போது கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மேற்பார்வையாளர் முத்துராஜ் நெற்றி, கண் மீது கம்பு பட்டதில் காயமடைந்தார். இதனைத் தொடர்ந்து அவர் மதுரையில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி