மேலும் செய்திகள்
மாங்காடு, பட்டூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
22-May-2025
விருதுநகர் : விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தின் அருகே செல்லும் நான்கு வழிச்சாலையின் ஓரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் நான்கு வழிச்சாலை எண் 44ன் இருபுறங்களில் தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதாக புகார் தெரிவிக்கப்பட்டது.மேலும் தற்போது மேம்பாலம் பணிகள் நடப்பதால் பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகள் ரோட்டில் நிற்க வேண்டிய நிலை உண்டாகியுள்ளது. வாகன விபத்துக்களும் ஏற்படும் வாய்ப்பு அமைந்துள்ளது.இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி அதன் விவரத்தை தெரிவிக்குமாறு கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்தார். இதையடுத்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து சூலக்கரை வரை நான்கு வழிச்சாலை இருபுறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகள் முழுவதுமாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளால் அகற்றப்பட்டது.
22-May-2025