சிவகாசியில் அனுமதியின்றி வைத்த பிளக்ஸ் போர்டுகள் அகற்றம்
சிவகாசி: சிவகாசியில் பொது இடங்களில் அனுமதி இன்றி வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் போர்டுகள், விளம்பர பேனர்கள் மாநகராட்சி சார்பில் அகற்றப்பட்டது.சிவகாசி மாநகராட்சியில் போக்குவரத்து நிறைந்த பல்வேறு பகுதிகளில் அனுமதியின்றி பிளக்ஸ் போர்டுகள், விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து கமிஷனர் சரவணன், மாநகர திட்டமிடுனர் மதியழகன் ஆய்வாளர் சுந்தரவள்ளி, மேற்பார்வையாளர் முத்துராஜ் தலைமையில் போக்குவரத்திற்கு இறையூராக இருந்த அனைத்து பிளக்ஸ் போர்டுகள், விளம்பரப் பேனர்கள் அகற்றப்பட்டது.கமிஷனர் கூறுகையில், நகரில் போக்குவரத்திற்கு இடையூறாக விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டால் அபராதம் விதிக்கப்படுவதுடன் போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் பேனர்கள் வைப்பதற்கு மாநகராட்சி அனுமதி பெற வேண்டும், என்றார்.