நரிக்குடி பள்ளியில் மழைநீர் தேங்காமல் சீரமைப்பு
நரிக்குடி: நரிக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் மழைநீர் தேங்கி மாணவர்கள் சிரமப்படுவதாக தினமலர் நாளிதழில் வெளியான செய்தியையடுத்து, மண் அடித்து சீரமைக்கப்பட்டது. மாணவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். நரிக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் சில தினங்களுக்கு முன் பெய்த கனமழையால் பள்ளி வளாகத்தில் மழை நீர் தேங்கி மாணவர்கள் நடந்து செல்ல சிரமம் ஏற்பட்டு, இடறி விழுந்தனர். குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. அதன் எதிரொலியாக வளாகத்தில் கிராவல் மண் அடித்து சீரமைக்கப்பட்டது. தற்போது மாணவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். மேலும் மழை நீர் எளிதில் வெளியேறும் வகையில் நடைபாதையை உடைத்து வடிகால் ஏற்படுத்தப்பட்டது.