உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சாத்துார் நகராட்சி காய்கனி மார்க்கெட் கடைகள் புதிதாக கட்டித்தர கோரிக்கை

சாத்துார் நகராட்சி காய்கனி மார்க்கெட் கடைகள் புதிதாக கட்டித்தர கோரிக்கை

சாத்துார் : சாத்துார் சிவன் கோயில் வடக்கு ரத வீதியில் இடித்து அகற்றப்பட்ட நகராட்சி காய்கனி மார்க்கெட் கடைகளை மீண்டும் கட்டித்தர வேண்டுமென வியாபாரிகள் வலியுறுத்தி உள்ளனர். சிவன் கோயில் வடக்கு ரத வீதியில் நகராட்சி காய்கறி மார்க்கெட் கடைகள் 40 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. காய்கனி மார்க்கெட்டில் இருபதுக்கும் மேற்பட்ட கடைகளில் வியாபாரிகள் பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வந்தனர். நகர் மற்றும் சுற்று கிராமங்களை சேர்ந்த மக்கள் இந்த காய்கனி மார்க்கெட்டுக்கு வந்து மொத்தமாகவும் சில்லரையாகவும் காய்கறிகளையும் மளிகை சாமான்களையும் வாங்கிச் சென்றனர். கடந்தாண்டு பெய்த பருவமழையின் போது காய்கனி மார்க்கெட்டின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. மேலும் கடைகள் தொடர்ந்து பராமரிக்கப்படாத தால் சுவரில் ஆங்காங்கே விரிசல் காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து நகராட்சி பொறியாளர் கட்டடத்தை பார்வையிட்டு மிகவும் பலவீனமாக உள்ளதாக கூறியதை தொடர்ந்து இங்கு வியாபாரம் செய்து வந்த வியாபாரிகள் வெளியேற்றப்பட்டு கடைகள் முற்றிலுமாக இடித்து அகற்றப்பட்டது. பல ஆண்டாக இங்கு வர்த்தகம் செய்த வியாபாரிகள் தற்போது காய்கறி கடை பஜார் அருகில் காலியாக உள்ள நிலங்களில் தகர கொட்டகை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். மழை பெய்யும் போது கடைக்குள் மழை நீர் புகுந்து விடுவதாலும் வியாபாரிகள் தங்கள் வைத்துள்ள பழங்கள் காய்கறிகள் மளிகை பொருட்கள் மழை நீரில் நனைந்து வீணாகி வருவதாலும் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர் எனவே இடித்து அகற்றப்பட்ட நகராட்சி காய்கனி மார்க்கெட் கடைகளை விரைந்து கட்டி தர வேண்டுமென வியாபாரிகள் நகராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !