உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விருதுநகரில் வந்தே பாரத் ரயில் நின்று செல்ல வேண்டும் ; தென்னக ரயில்வேக்கு கோரிக்கை

விருதுநகரில் வந்தே பாரத் ரயில் நின்று செல்ல வேண்டும் ; தென்னக ரயில்வேக்கு கோரிக்கை

விருதுநகர்; விருதுநகரில் பகல் நேர சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் நின்று செல்ல தென்னக ரயில்வே பொது மேலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விருதுநகர் வியாபாரத் தொழில் துறைச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சங்கத்தலைவர் யோகன் அறிக்கை: தமிழகத்தில் ரயில் போக்குவரத்து துவங்கிய காலத்தில் இருந்து விருதுநகர் ரயில்வே ஸ்டேஷன் உருவாக்கப்பட்டு செயல்படுகிறது. இங்கிருந்து அதிகளவில் சரக்குகள் தினமும் ரயில்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் விருதுநகர் வழியாக துாத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, செங்கோட்டைக்கு ரயில் போக்குவரத்து இணைக்கப்பட்டுள்ளது. அருப்புக்கோட்டை மார்க்கத்தில் ராமேஸ்வரம் இணைக்கப்பட்டுள்ளது. தென் தமிழகத்தின் நகரங்களுக்கு செல்வதற்கான முக்கிய சந்திப்பாக உள்ள விருதுநகர் ரயில்வே ஸ்டேஷனில் சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவில் செல்லும் பகல் நேர வந்தே பாரத் நிற்காமல் சென்று வருகிறது. விருதுநகரில் அதிக வணிக நிறுவனங்கள், கல்லுாரிகள் செயல்படுகிறது. விருதுநகரை சுற்றிய பகுதிகள், அருப்புக்கோட்டை, சிவகாசி, ஸ்ரீவில்லிப்புத்துார், ராஜபாளையத்தை சுற்றியுள்ள மக்கள், வணிகர்கள் பயன்பெறும் வகையில் விருதுநகர் ரயில்வே ஸ்டேஷனில் வந்தே பாரத் ரயில் நின்று செல்ல தென்னக ரயில்வே பொது மேலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !