உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / குடியிருப்போர் குரல்

குடியிருப்போர் குரல்

சிவகாசி; சிவகாசி மாநகராட்சி 5 வது வார்டு சிறுவர் பூங்கா தெருவில் ரோடு, வாறுகால் சேதம், சுகாதார வளாகம் செயல்படவில்லை என எண்ணற்ற பிரச்னைகளில் அப்பகுதி குடி யிருப்போர் சிக்கி தவித்து வருகின்றனர். அப்பகுதி குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் ராஜ செல்வி, மரிய முத்தம்மாள், இசக்கியம்மாள், செல்வம், காசிராஜன், ஜெயச்சந்திரன் கூறியதாவது, பெரும்பான்மையான தெருக்களில் ரோடு சேதம் அடைந் துள்ளது. தெரு மிகவும் குறுகியதாக இருப்பதால் டூவீலர்கள் சென்று வருவதே மிகவும் சிரமமாக உள்ளது. மழைக்காலங்களில் தெருக்களில் தண்ணீர் தேங்கும்போது நடப் பதற்கே சிரமமாக உள்ளது. வாறுகாலும் சேத மடைந்துள்ளது. ரோடு வாறுகாலை சீரமைப்பதற்காக ஆறு மாதத்திற்கு முன்பு டெண்டர் விடப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டும் இதுவரையிலும் பணி துவங்கவில்லை. வாறுகால் துார்வாரப் படாததால் கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் ஏற்படுவதோடு சுகாதாரக் கேடும் ஏற்படுகிறது. கொசு தொல்லையால் பெரிதும் அவதிப்பட நேரிடுகிறது. தெருக்களில் தெரு நாய்கள் ரோட்டில் நடமாடுபவர்களை விரட்டி கடிக்கின்றது. குழந்தைகள் தெருவில் விளையாட கூட முடியவில்லை. இப்பகுதி மக்களுக்காக ஆலமரத்துப்பட்டி ரோட்டில் 12 ஆண்டுகளுக்கு முன்பு நவீன சுகாதார வளாகம் கட்டப்பட்டது. ஆனால் இதுவரையிலும் பயன்பாட்டிற்கு வராமலேயே சேதம் அடைந்து விட்டது. இதனால் பெண்கள் பெரிதும் சிரமப் படுகின்றனர். எனவே சுகாதார வளாகத்தில் மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு தண்ணீர், மின்சார வசதி ஏற்படுத்தி உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை