ஓய்வு செவிலியரிடம் ரூ.30 லட்சம் மோசடி: 5 பேர் மீது வழக்கு
விருதுநகர்: விருதுநகரில் ஓய்வு செவிலியர் அல்லிபாப்பாவிடம் 76, நியோமேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பு, நிலம் தருவதாக ரூ.30 லட்சம் மோசடி செய்த பிச்சைமணி, மகன் செல்வக்குமார், மனைவி சவுந்தர்யா, நந்தினி, ஜெயந்தி மீது போலீசார் வழக்கு பதிந்தனர். விருதுநகர் பாண்டியன் நகர் முத்தால் நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற செவிலியர் அல்லிப்பாப்பா 76. இவரிடம் 2021ல் பாலவநத்தத்தைச் சேர்ந்த பிச்சைமணி, மகன் செல்வக்குமார், மனைவி சவுந்தர்யா, பிச்சைமணி மகள் நந்தினி, ஜெயந்தி ஆகியோர் நியோமேக்ஸ் நிறுவனத்தின் பெயரை கூறி அறிமுகமாகினர். மேலும் எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பாகவும், நிலம் தருவதாகவும் கூறி 2021 ஜூலை 7ல் ரூ. 18 லட்சம், 2021 ஆக.,21ல் ரூ.6 லட்சம், 2021 டிச.,15ல் ரூ.6 லட்சம் என ரூ. 30 லட்சம் முதலீடாக பெற்றனர். பணத்தை திரும்ப கொடுக்காமல் மோசடி செய்தனர். போலீசார் மோசடியில் ஈடுபட்ட 5 பேர் மீது வழக்கு பதிந்தனர்.