உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நெல் சாகுபடி விளைச்சல் போட்டி; பங்கேற்க அழைப்பு

நெல் சாகுபடி விளைச்சல் போட்டி; பங்கேற்க அழைப்பு

விருதுநகர்: கலெக்டர் சுகபுத்ரா செய்திக்குறிப்பு: மாநில அளவில் திருந்திய நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டியில் பங்கேற்கலாம். இதில் மாநில அளவில் முதலிடம் பெறும் விவசாயிக்கு ரூ.5 லட்சம், ரூ.7 ஆயிரம் மதிப்பிலான பதக்கம் வழங்கப்படும். பங்கேற்கும் விவசாயிகள் குறைந்த பட்சம் 2 ஏக்கர் பரப்பில் திருந்திய நெல் சாகுபடி செய்தவராக இருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட நெல் ரகங்களை மட்டுமே பயிரிட வேண்டும். நில உடைமைதாரர்கள், குத்தகைத்தாரர்கள் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம். விரும்புவோர் வட்டார வேளாண் உதவி இயக்குனரிடம் ரூ.150 பதிவு கட்டணம் செலுத்த வேண்டும். சென்னை வேளாண் இயக்குநர் தலைமையிலான, மாநில குழு இறுதி முடிவு எடுக்கும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை