உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தேசிய நெடுஞ்சாலைகளில் பேரி கார்டுகளால் விபத்து அபாயம்: இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளுக்கு சிக்கல்

தேசிய நெடுஞ்சாலைகளில் பேரி கார்டுகளால் விபத்து அபாயம்: இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளுக்கு சிக்கல்

திருமங்கலம்--கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீவில்லிபுத்துார் வழியாக தென்காசி, கொல்லம், திருநெல்வேலி, நாகர்கோவில், தேனி, மூணாறு, மதுரை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் சென்று வருகிறது. இந்த சாலை தமிழகம் கேரளாவை இணைக்கும் முக்கிய வழித்தடம் என்பதால் 24 மணி நேரமும் சரக்கு வாகன போக்குவரத்து அதிகமாக நடைபெறுகிறது.இதைத் தவிர மாநிலங்களில் இருந்தும் தினசரிஇவ்வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு சென்று வருகின்றனர் இதனால் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நகரங்களில் வாகன போக்குவரத்து அதிகரித்துஉள்ளது.ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், சேத்துார் குடியிருப்பு நடுவே செல்லும் இதே ரோட்டில் தான் உள்ளூர் வாகனங்களும் செல்ல வேண்டி உள்ளது. இந்நிலையில் சாலை விபத்துகளை தடுப்பதற்கு போக்குவரத்து போலீசார் சார்பில் வேகத்தை கட்டுப்படுத்த பேரிகார்டுகள் வைக்கப்பட்டுள்ளன.இது தவிர தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் அடிக்கடி விபத்து ஏற்படும் விபத்து ஸ்பாட் பகுதிகளிலும், நகர்ப்புற கிராம சாலை மெயின் ரோடு சந்திப்பு பகுதிகளிலும் பேரிகார்டுகளை வைத்து கடமையை முடிக்கின்றனர். இத்துடன் விபத்து, உயிரிழப்பு பகுதிகளில் உடனடியாக எந்தவித விதி முறையும் பின்பற்றாமல் பேரி கார்டுகளை நிறுத்துகின்றனர். குறிப்பாக வன்னியம்பட்டி விலக்கு, போலீஸ் ஸ்டேஷன் வளைவு, புதுப்பட்டி விலக்கு, பஞ்சு மார்க்கெட், மாரியம்மன் கோயில், தளவாய்புரம் விலக்கு, சேத்துார் போலீஸ் ஸ்டேஷன் பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள பேரி கார்டுகளால் வேகமாக வரும் வாகனங்கள் எதிர்கொள்ள முடிவதில்லை. இரவு நேரங்களில் இந்நிலை மிகவும் அதிகம். பேரி கார்டுகள் வைப்பதற்கு என நெடுஞ்சாலை துறைக்கு நீதிமன்றம் சில விதிமுறைகளை வகுத்துஉள்ளது. இரவு நேரங்களில் குறைந்தது 100 மீட்டர் தூரத்தில் இருந்து பார்க்கக்கூடிய பெரிய பிரதிபலிப்பான்களை வைப்பதுடன் அவற்றின் இரண்டு பக்கமும் அணைந்து எரியும் பிளிங்கர் விளக்குகள் பொருத்தப்பட வேண்டும். மேலும் தொடர்ந்து அடுத்தடுத்து வைக்கப்படும் பேரிகார்டுகளுக்கான இடைவெளி பின்பற்ற வேண்டும். இது தவிர சாலை வளைவு பகுதிகளில் நெருக்கமாக அடுத்தடுத்து பேரி கார்டுகளை வைப்பதுடன் இதுகுறித்து தகுந்த விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை வாசகங்களை முறையாக வைப்பதில்லை.தளவாய்புரம் விலக்கு, சேத்துார் பெருமாள் கோயில் வளைவுகளில் ஒரு பக்கம் பிளிங்கர் விளக்கு நீண்ட காலமாக செயல்படாமல் உள்ளது.அது தவிர அனைத்து பேரிகார்டுகளும் உள்ளூர் போக்குவரத்து குறைந்த இரவு நேரங்களில் அகற்றி வைப்பது சாலை தடுப்புகள்குறித்து குறிப்பிட்ட துாரம் முன்பே விழிப்புணர்வு வாசகங்கள் வாகன ஓட்டிகளுக்கு தெரியும் படி அமைப்பது போன்றவை பின்பற்ற வேண்டும்.சாலைகளில் உள்ள தேவையற்ற தடைகளுக்குமுறையான விழிப்புணர்வு ஏற்படுத்தி விபத்து அபாயத்தை குறைக்க போலீசாருக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Sathiya Moorthy
ஜூன் 04, 2025 04:41

கன்னியாகுமாரி சென்னை தேசிய நெடுஞ்சாலைகளில் மற்றும் தமிழ்நாடெங்கும் இந்தியா பிரச்சனை உள்ளது. கண்டிப்பாக உட்சபட்ச நடவடிக்கை தேவை.