மேலும் செய்திகள்
குடிநீர் கேட்டு சாலை மறியல்
12-Jul-2025
சாத்துார் : வெம்பக்கோட்டை தாலுகா மேலக்கோதை நாச்சியார்புரத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு குடிநீர் பம்பிங் மோட்டார் பழுதானதால் குடிநீர் வினியோகம் தடைபட்டது. பலமுறை ஊராட்சி அலுவலகத்திலும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் கிராம மக்கள் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனை தொடர்ந்து நேற்று மாலை 4:00 மணிக்கு அக்கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் விஜயகரிசல்குளம் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவம் அறிந்து அங்கு சென்ற வெம்பக்கோட்டை இன்ஸ்பெக்டர் நம்பிராஜன் மறியல் செய்த மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி சமரசம் செய்ததை தொடர்ந்து மக்கள் கலைந்து செய்தனர்.
12-Jul-2025