உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ரோடு பராமரிப்பு பணிகள் தீவிரம்

ரோடு பராமரிப்பு பணிகள் தீவிரம்

சிவகாசி, : சிவகாசி உட்கோட்டத்தில் நெடுஞ்சாலை துறை சார்பில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு ரோடு பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றது.விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு பெய்த வடகிழக்கு பருவமழை வெள்ளப்பெருக்கால் பாதிப்பு ஏற்பட்டது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. சிவகாசி உட்கோட்டத்தில் உள்ள அனைத்து ரோடுகளில், பாலங்களின் நீர்வழிப் பாதையில் மழைநீர் தங்கு தடையின்றி செல்ல ஏதுவாக நெடுஞ்சாலைத் துறை பணியாளர்கள் கொண்டு சீரமைப்பு, பராமரிப்பு பணி நடந்தது. நீர்வழிப்பாதை சுத்தம் செய்யப்பட்டதோடு, ரோட்டோரங்களில் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த முட்செடிகள் அகற்றப்பட்டது.மணல் மூடைகள், தடுப்பு கட்டைகள், மரம் அறுக்கும் இயந்திரம், மண்வெட்டி, உள்ளிட்ட தளவாட சாமான்கள் நெடுஞ்சாலைத்துறை சிவகாசி உட் கோட்ட அலுவலகத்தில் தயார் நிலையில் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை