உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சாலையோர வியாபாரிகள் ஆலோசனை கூட்டம்

சாலையோர வியாபாரிகள் ஆலோசனை கூட்டம்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை நகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கான கூட்டம் நடந்தது.அருப்புக்கோட்டை நகரில் மதுரை ரோடு திருச்சி ஈரோடு அண்ணாதுரை சிலை பகுதி பந்தல்குடி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் ரோடு ஓரங்களில் கடைகள் அமைத்து வியாபாரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. நகரின் ரோடுகள் குறுகலாக இருப்பதாலும், சாலை ஓர வியாபாரிகளாலும் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இதை கட்டுப்படுத்தவும், போக்குவரத்து நெரிசல் இல்லாத பகுதிகளில் சாலை ஓர வியாபாரிகள் கடைகள் வைத்துக் கொள்ள ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் சாலையோர வியாபாரிகள், டிராபிக் போலீசார், நகராட்சி சுகாதாரப் பிரிவு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.நகரமைப்பு அலுவலர் குமார் நகரின் வேறு பகுதிகளில் கடைகள் அமைத்துக் கொள்வது குறித்து சாலை ஓர வியாபாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை