உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பெண்ணிடம் ரூ.1.15 லட்சம் திருட்டு

பெண்ணிடம் ரூ.1.15 லட்சம் திருட்டு

அருப்புக்கோட்டை : துாத்துக்குடி மாவட்டம் வீரபாண்டிய புரத்தைச் சேர்ந்தவர் முத்துகுரு,48, தனது வீட்டு விசேஷத்திற்காக ஜவுளி வாங்க மதுரை செல்வதற்காக, அருப்புக்கோட்டை கணேஷ் நகரில் இருக்கும் தனது சகோதரியை கூட்டிச் செல்ல பஸ்சில் வந்தார். பின்னர், திருச்சூழி ரோட்டில் இறங்கி வேறு பஸ்ஸில் ஏறி சகோதரி வீட்டுக்கு சென்று பார்த்தபோது கட்டை பையில் வைத்திருந்த 1 லட்சத்து 15 ஆயிரம் திருடு போனது தெரிய வந்தது. டவுன் போலீசார் விசாரிக்கின்றனர். அருப்புக்கோட்டை டவுன் பகுதிகளில் உள்ள பஸ் ஸ்டாப்புகளில் பெண்களிடம் பணம் கொள்ளை அடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது குறித்து போலீசார் மக்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை