உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஸ்ரீவி.,யில் ஐயப்ப பக்தர்களால் பால்கோவா விற்பனை அதிகரிப்பு

ஸ்ரீவி.,யில் ஐயப்ப பக்தர்களால் பால்கோவா விற்பனை அதிகரிப்பு

ஸ்ரீவில்லிபுத்துார்; சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்று திரும்பும் பக்தர்கள் ஆண்டாளை தரிசிக்க வருவதால் ஸ்ரீவில்லிபுத்தூரில் பால்கோவா விற்பனை அதிகரித்துள்ளது.கார்த்திகை மாதம் துவங்கியது முதல் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்த பல ஆயிரம் ஐயப்ப பக்தர்கள் மதுரை மீனாட்சி அம்மனை தரிசித்து விட்டு சபரிமலை செல்லும் வழியில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளை தரிசிக்க வருகின்றனர். இதுபோல் கோவை வழியாக சபரிமலை செல்லும் பக்தர்களும் ஸ்ரீவில்லிபுத்தூர் வழியாக திரும்பி செல்கின்றனர்.இவ்வாறு வந்து செல்லும் போது ஆண்டாளை தரிசிக்க குவிகின்றனர். இதனால் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக ஸ்ரீவில்லிபுத்தூரில் ஐயப்ப பக்தர்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.இந்நிலையில் தற்போது மார்கழி மாதத்தில் ஆண்டாளை தரிசிப்பது சிறப்பு என்பதால் ஏராளமான பெண்கள் தங்கள் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இதனால் கடந்த சில நாட்களாக நான்கு ரத வீதியிலும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.ஐயப்ப பக்தர்கள் வருகையினால் ஆண்டாள் கோயிலை சுற்றி உள்ள சுவீட் ஸ்டால்களில் பால்கோவா விற்பனை வழக்கத்தைவிட அதிகமாக நடப்பதால் உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை