உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சாத்துார் வெங்கடாஜலபதி கோயில் நிலம் மீட்பு

சாத்துார் வெங்கடாஜலபதி கோயில் நிலம் மீட்பு

சாத்துார், : சாத்துார் வெங்கடாஜலபதி கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் வீடு கட்டி தரை வாடகை செலுத்தாமல் வசித்து வந்தவரை நீதிமன்ற உத்தரவுப்படி ஹிந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் வெளியேற்றி ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டனர்.சாத்துார் தெற்கு ரத வீதியை சேர்ந்தவர் முனியாண்டி வெங்கடாஜலபதி கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் தரை வாடகைக்கு வீடு கட்டி வசித்து வந்தார். நீண்டகாலமாக வாடகை கட்டாததால் இவர் மீது ஹிந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் வாடகை கட்ட கோரி நோட்டீஸ் கொடுத்து வழக்கு தொடுத்தனர்.சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கில் தவணை முறையில் வாடகையை கட்டி விடுவதாக முனியாண்டி வாக்குறுதி அளித்திருந்தார்.ஆனால் அவர் சொன்னபடி வாடகையை கட்டவில்லை இதனைத் தொடர்ந்து ஹிந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் உயர் நீதிமன்றத்தை அணுகினர் நீதிமன்ற உத்தரவுப்படி ஹிந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர்நாகராஜன் விருதுநகர் சரக ஆய்வாளர் கண்ணன் கோயில் நிர்வாக அலுவலர் லட்சுமணன் ஆகியோர் முனியாண்டி வசித்த வீட்டிற்கு சென்று அவரை வெளியேற்றி வீட்டை பூட்டி சீல் வைத்து ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டனர்.சாத்துார் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !