மேலும் செய்திகள்
இன்றைய மின்தடை..
12-Nov-2024
விருதுநகர் : விருதுநகர் பாண்டியன் நகரில் நடந்த சவேரியார் சர்ச் திருவிழா, தேர்பவனியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.விருதுநகர் பாண்டியன் நகரில் உள்ள சவேரியார் சர்ச் திருவிழா நவ. 22ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் திருச்சி பாதிரியார் பேட்ரிக் ஜெயராஜ் கொடியினை ஏற்றினார். அதன் பின் தினமும் மாலை நவநாள் திருப்பலி, மறையுரை நடந்தது.9ம் நாள் திருவிழா பாதிரியார்கள் அந்தோணி பாப்புசாமி, லாரன்ஸ், ஆரோக்கியம், தாமஸ் வெனிஸ், உதவிப் பாதிரியார்கள் மரிய ஜான் பிராங்க்ளின், ஆனந்த பிரபு, ரபேல் தலைமையில் கூட்டுத்திருப்பலி, மறையுரை நடந்தது.இதையடுத்து சவேரியார், லுார்து மாதா, மிக்கேல் அதிதுாதர் ஆகியோரின் உருவம் அலங்கரிக்கப்பட்டு ரோசல்பட்டி ஊராட்சி அலுவலகம் வழியாக பாண்டியன் நகர், கே.கே.எஸ்.எஸ்.என்., நகர் வழியாக மீண்டும் சர்ச் வரை தேர்பவனி நடந்தது. 10வது நாள் மாலையில் கூட்டுத் திருப்பலி, நற்கருணை பவனி நடந்து கொடியிறக்கம் செய்யப்பட்டது. ஏற்பாடுகளை பாதிரியார்கள் லாரன்ஸ், ஆரோக்கியம், உதவி பாதிரியார் மரிய ஜான் பிராங்க்ளின், அன்பியங்கள், பக்த சபைகள், இளையோர் இயக்கம் ஆகியோர் செய்தனர்.
12-Nov-2024