உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பள்ளி, கல்லுாரி செய்திகள்

பள்ளி, கல்லுாரி செய்திகள்

ராஜபாளையம்: ராஜபாளையம் ராஜூக்கள் கல்லுாரி முன்னாள் மாணவர்கள் சங்கம விழா நடந்தது.சங்கச் செயலர் சோமசுந்தரம் வரவேற்றார். தலைவர் முத்துகிருஷ்ணன் தலைமை வகித்தார்.பொருளாளர் வெங்கடேஸ்வரன் மாணவர் சங்க குறிப்புரை வழங்கினார். கல்லுாரி பொறுப்பு முதல்வர் ராமகிருஷ்ணன், துணைத் தலைவர் குமார் ராஜா சங்கத் திட்டப் பணிகள் குறித்து பேசினர். பல்கலை தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள், வேலைவாய்ப்பு பயிற்சி பெற்றவர்கள், நிறுவன உரிமையாளர்கள் பாராட்டப்பட்டு பரிசு சான்றிதழ் வழங்கப்பட்டது. மாணவர்கள் கலை நிகழ்ச்சி நடந்தது. ஒருங்கிணைப்பாளர் ஜெகநாத் நன்றி கூறினார்.மாணவர்கள், பேராசிரியர்கள் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி