உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விபத்தில் பள்ளி மாணவன் பலி

விபத்தில் பள்ளி மாணவன் பலி

நரிக்குடி: நரிக்குடி எஸ்.கல்விமடையைச் சேர்ந்த கருப்பசாமி. இவரது மகன் கவுசிக் 16, அ.முக்குளம் அரசு பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு படித்து வந்தார். எஸ். கல்விமடையில் நடந்த கோயில் கும்பாபிஷேகத்திற்கு ரோட்டோரம் நடந்து சென்றார். அப்போது அதே ரோட்டில் எதிரே காரியாபட்டி ஆவியூரை சேர்ந்த மகேந்திரன் ஒட்டி வந்த டூவீலர் மாணவன் மீது மோதியது. படுகாயம் அடைந்த கவுசிக்கை திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கொண்டு செல்லும் வழியில் மாணவர் உயிரிழந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி