அறிவியல் மன்ற துவக்க விழா
விருதுநகர்,: விருதுநகர் வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரியில் அறிவியல் மன்ற துவக்க விழா நடந்தது.இதில் கணிதவியல் துறை உதவிப் பேராசிரியர் சித்ரா லெட்சுமி வரவேற்றார். செந்திக்குமார நாடார் கல்லுாரி உதவிப் பேராசிரியர் நிர்மல்குமார் பேசினார். இதில் அறிவியல் மன்றத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள், மாணவிகள் பலர் பங்கேற்றனர்.