மேலும் செய்திகள்
சிவகங்கை மாவட்டத்தில் சுதந்திர தின கொண்டாட்டம்
16-Aug-2025
ஆசிரியர் தின விழா; பள்ளிகளில் கொண்டாட்டம்
05-Sep-2025
தளவாய்புரம் : ஸ்ரீவில்லிபுத்துார் கல்வி மாவட்டத்தில் சாரண, சாரணியர் ஆசிரியர்களுக்கான ஏழு நாள் அடிப்படை பயிற்சி முகாம் தளவாய்புரம் பு.மூ.மா மாரிமுத்து நாடார் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும், மெட்ரிக் தனியார் பள்ளிகளில் இருந்து 56 ஆசிரியர்கள் பங்கேற்று பயிற்சி பெற்றனர். 7 நாள் முகாமில் இயக்க வரலாறு, ஆபத்து கால கயிறு முடிச்சுகள், கூடாரம் அமைத்தல், வழிநடை பயணம் போன்ற பயிற்சி வழங்கப்பட்டது. கல்வி மாவட்ட சாரண சாரணியர் இயக்க செயலாளர் ராமசுப்பிரமணியன், தலைமை ஆசிரியர் தனபாலன் முன்னிலை வகித்தார். பள்ளிச் செயலர் பாலாஜி தலைமை வகித்தார். தேர்வாளர்களாக கல்பனா, கஜலட்சுமி, பிரேம்குமார், மகேஸ்வரி பங்கேற்றனர்.
16-Aug-2025
05-Sep-2025