இருவருக்கு அரிவாள் வெட்டு
சிவகாசி: சிவகாசி அருகே பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட தகராறில் இரு வாலிபர்கள் அரிவாளால் வெட்டப்பட்டனர்.சிவகாசி நாரணாபுரம் புதுார் பசும்பொன் தெருவை சேர்ந்தவர் முத்துப்பாண்டி 23. இவர் வடக்குத்தி அம்மன் கோயில் அருகே இருந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த சிலர் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த செங்கமலப் பட்டியைச் சேர்ந்த முனீஸ்வரனுக்கும் பட்டாசு வெடித்தவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் முத்துப்பாண்டியையும் அவரது உறவினர் சுந்தரமூர்த்தியையும் 22,முனீஸ்வரன், கருப்பசாமி 28, கார்த்திக் ராஜா 29, காளீஸ்வரன் 27, ஆகியோர் அரிவாளால் இருவரையும் வெட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். இருவரும் சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். கிழக்கு போலீசார் கருப்பசாமி, கார்த்திக் ராஜா, காளீஸ்வரனை கைது செய்து முனீஸ்வரனை தேடுகின்றனர்.