செப். 18 மருத்துவ காப்பீடு குறைதீர் கூட்டம்
விருதுநகர்; கலெக்டர் சுகபுத்ரா செய்திக்குறிப்பு: அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான புதிய மருத்துவக்காப்பீட்டு திட்டம் தொடர்பான குறைதீர் கூட்டம் செப். 18ல் நடக்கிறது. மருத்துவ செலவினத் தொகையை திரும்பக் கோரும் இனங்களின் மீது தீர்வு காணும் வகையில் மனுக்கள், அசல் ஆவணங்கள் விடுபட்ட மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் இதில் மனு அளிக்கலாம். ஒய்வூதியதாரர்கள் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து அதன் மீது விருதுநகர், இணை இயக்குநர், மாவட்ட மருத்துவம், இன்சூரன்ஸ் நிறுவனத்தால் ஆவணங்கள் கோரப்பட்டிருக்கும் பட்சத்தில் இக்கூட்டத்தில் தகுந்த ஆவணங்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம், என்றார்.