உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மரங்களை நட்டு சேவை; அசத்தும் ஆசிரியர்

மரங்களை நட்டு சேவை; அசத்தும் ஆசிரியர்

உலகில் உள்ள ஒவ்வொரு ஜீவராசிகளும் ஒன்றோடு ஒன்று தொடர்புபடுத்தி தான் வாழ வேண்டி இருக்கிறது. குறிப்பாக மரங்கள் இன்றி மனிதனால் வாழ முடியாது.மரங்கள் பல்வேறு வழிகளில் மனிதர்கள் வாழ உதவி புரிகிறது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. அதற்கு மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும் அல்லது தானாக வளர்வதற்கான வழிகளை ஏற்படுத்த வேண்டும்.ஆனால் தற்போது மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டிய சூழ்நிலை தான் இருந்து வருகிறது. காரணம் மக்கள் தொகை பெருக்கத்தால், இருக்கிற மரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. ஒரு மனிதன் வாழ மாதம் 740 கி. ஆக்சிஜன் தேவைப்படுகிறது. ஆக்சிஜனை உருவாக்க சராசரியாக 8 மரங்கள் தேவை. 3 மரங்கள் தான் இருப்பதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மக்கள் அவரவர் வேலைகளை கவனிப்பதிலேயே நேரம் கழிந்து விடுகிறது.ஆரோக்கியமான வாழ்விற்கு தேவையான அடிப்படை விஷயங்களை யோசிப்பவர்கள் மிகக் குறைவு. அப்படிப்பட்ட சூழ்நிலையில் மனிதன் ஆரோக்கியமாக வாழ தங்களால் இயன்ற சேவைகளை செய்ய வேண்டும் என்கிற சிந்தனையில் காரியாபட்டியைச் சேர்ந்த ஆசிரியர் பொன்ராம் பசுமை அறக்கட்டளையை துவக்கி, தனது சம்பளத்தில் ஒரு பகுதியை மரக்கன்றுகள் நடுவதற்கு செலவிட்டு வருகிறார்.வருங்கால சந்ததியினருக்கு ஏதாவது ஒரு வகையில் பயனுள்ள விஷயங்களை விட்டுச் செல்ல வேண்டும் என 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறார். இவரது சேவை மிகப்பெரிய பாராட்டுக்குரியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை