தெருநாய்களால் கடும் தொல்லை
சிவகாசி: சிவகாசி தட்டாவூரணி வழியாக விளாம்பட்டி செல்லும் ரோட்டில் நடமாடும் நாய்களால் பள்ளி மாணவர்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.சிவகாசி தட்டாவூரணியில் இருந்து விளாம்பட்டி செல்லும் ரோட்டில் அதிக அளவில் தெரு நாய்கள் நடமாடுகின்றன. சாட்சியாபுரத்தில் ரயில்வே மேம்பாலம் பணிகள் நடந்து வரும் நிலையில் இந்த ரோடும் முக்கியமாற்றுப் பாதையாக உள்ளது.இந்த ரோட்டில் வாகனங்களில் செல்பவர்களை விரட்டுகையில் அவர்கள் தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். இதேபோல் சிவகாசி ரத வீதிகள், பழைய விருதுநகர் ரோடு, பி.எஸ்.ஆர்., ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தெரு நாய்கள் அதிக அளவில் நடமாடுகின்றன.சிவகாசி விஸ்வநத்தம் ரோட்டில் உள்ள நாய்கள் கருத்தடை அறுவை சிகிச்சை மையத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வந்து கருத்தடை செய்ய வேண்டும்.