உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  மெயின் ரோட்டில் வெளியேறும் கழிவுநீர் : மக்கள் அவதி

 மெயின் ரோட்டில் வெளியேறும் கழிவுநீர் : மக்கள் அவதி

ராஜபாளையம்: ராஜபாளையம் மெயின் ரோட்டில் தொடர்ந்து வெளியேறி வரும் சாக்கடை கழிவு நீரால் மக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். நிரந்தர தீர்வு காண எதிர்பார்த்துள்ளனர். ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலை சாந்தி தியேட்டர் எதிரே பஸ் ஸ்டாப், பி.எஸ்.கே பார்க், குடியிருப்புகள், வணிக கடைகள் அமைந்துள்ளன. இப்பகுதி அம்பள புலி பஜார் பகுதியில் இருந்து வெளியேறும் கழிவு நீர் மெயின் ரோடு சாக்கடை அடைப்பு காரணமாக கடந்து செல்ல வழியின்றி ரோட்டோரம் வழிந்து தேங்கி நிற்கிறது. இதனால் நெடுஞ்சாலையில் கடந்து செல்லும் வாகனங்கள், பாதசாரிகள் கழிவு நீரில் பயணிப்பதுடன், வாகனங்கள் செல்லும்போது சாக்கடை மேலே சிதறி பாதிப்பு ஏற்படுத்துகிறது. இங்கு செயல்படும் ஓட்டல்கள், மருத்துவமனை, வணிக நிறுவனங்கள் முன்பு கழிவுகள் தேங்கி சுகாதார கேடு ஏற்படுத்தி வருகிறது. ஐந்து மாதங்களுக்கும் மேல் உள்ள தீராத பிரச்னையால் இப்பகுதியை கடக்கும் மக்கள் பாதிப்பிற்கு உள்ளாகி வருவது தொடர்கிறது. தேசிய நெடுஞ்சாலையில் வடிகால் அமைக்கும் பணியை முறைப்படுத்தி கழிவு நீர் தேங்காதவாறு சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ