உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சுகாதார வளாகம் முன் கழிவுநீர் தேக்கம்

சுகாதார வளாகம் முன் கழிவுநீர் தேக்கம்

சிவகாசி: சிவகாசி அருகே பள்ளப்பட்டி ஊராட்சி லிங்கபுரம் காலனியில் பயன்பாட்டில் உள்ள மகளிர் சுகாதார வளாகம் முன்பு கழிவுநீர் தேங்கியுள்ளதால் பெண்கள் அவதிப்படுகின்றனர்.சிவகாசி அருகே பள்ளப்பட்டி ஊராட்சி லிங்கபுரம் காலனியில் மகளிர் சுகாதார வளாகம் உள்ளது.இப்பகுதி பெண்கள் அனைவருமே இந்த சுகாதார வளாகத்தினை பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் சுகாதார வளாகம் முன் புறம் அப்பகுதியின் ஒட்டுமொத்த கழிவு நீரும் தேங்கியுள்ளது. மேலும் குப்பைகளும் இதிலேயேகொட்டப்படுகின்றது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் ஏற்படுவதோடு சுகாதார கேடும் ஏற்படுகிறது. இதனால் சுகாதார வளாகத்தை பயன்படுத்துவதில் பெண்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. மழைக்காலங்களில் கழிவு நீரை மிதித்துதான் சுகாதார வளாகத்திற்கு செல்ல வேண்டி உள்ளது. எனவே சுகாதார வளாகம் முன்பு கழிவுநீர் தேங்காமல் இருக்கவும், குப்பைகளை கொட்டாமல் இருப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி