பாலியல் தொல்லை 5 ஆண்டு சிறை
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் முனியசாமி 23, கூலி தொழிலாளி.இவர் 2023 மார்ச் 4ல் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்துார் மகளிர் போலீசார், அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்துார் போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. இதில் முனியசாமிக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நீதிபதி புஷ்பராணி தீர்ப்பளித்தார்.