உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை

பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை

சிவகாசி: சிவகாசி ரிசர்வ் லைன் மருதுபாண்டியர் நகரை சேர்ந்தவர் சாம் டேவிட் 30. இவர் விருதுநகரில் நடைபெறும் பொருட்காட்சியில் பேட்டரி கார் ஆபரேட்டராக வேலை செய்து வந்தார். பள்ளி விடுமுறைக்கு பகுதி நேரமாக பொருட்காட்சிக்கு வேலைக்கு சென்ற விருதுநகர் பகுதியை சேர்ந்த 9, பிளஸ் 2 படிக்கும் இரு மாணவர்கள் உடன் சாம் டேவிட்டுக்கு அறிமுகம் ஏற்பட்டு உள்ளது. சிவகாசியில் வேலை இருப்பதாக இரு மாணவர்களையும் வரவழைத்த சாம்டேவிட் தனது வீட்டில் வைத்து மாணவர்களுக்கு தெரியாமல் குளிர் பானத்தில் போதை மருந்து கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து மாணவர்கள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். சிவகாசி டவுன் போலீசார் சாம் டேவிட் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை