உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நான்கு வழிச்சாலையில் வேண்டும் நிழற்குடைகள்: மழையில் தவிப்பு

நான்கு வழிச்சாலையில் வேண்டும் நிழற்குடைகள்: மழையில் தவிப்பு

ஸ்ரீவில்லிபுத்துார்: ராஜபாளையத்தில் இருந்து திருமங்கலம் வரை செல்லும் நான்கு வழிச்சாலையில் மழை நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் நின்று செல்ல வசதியாக நிழற்குடைகள் அமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருந்து ராஜபாளையம் வரை 71.6 கிலோ மீட்டர் தூரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் அதிகாரப்பூர்வமாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படாத நிலையில் தற்போது பெரும்பாலான வாகனங்கள் நான்கு வழி சாலைகளில் பயணித்து வருகிறது. முன்பு கிருஷ்ணன் கோவிலில் இருந்து திருமங்கலம் வரை தேசிய நெடுஞ்சாலையாக இருந்த போது ரோட்டின் இருபுறமும் ஏராளமான மரங்கள் இருந்தது. அதனால் வெயில், மழை நேரங்களில் டூவீலரில் செல்பவர்கள் ஒதுங்கி நின்றனர். இந்நிலையில் நான்கு வழிச்சாலைக்காக மரங்கள் முழு அளவில் அகற்றப்பட்ட நிலையில், தற்போது மழை நேரத்தில் நின்று செல்ல வசதியாக நிழற்குடைகள் இல்லாமல் டூவீலரில் செல்பவர்கள் நனைந்து கொண்டே செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனை தவிர்க்க ஒவ்வொரு 500 மீட்டர் தூரத்திற்கும் விசாலமான நிழற்குடைகள் அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை