உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பசுமைக் காடாக சாஸ்தா கோவில் நீர் தேக்க வளாகம்; வெற்றிலை வியாபாரியின் தணியாத ஆர்வம்

பசுமைக் காடாக சாஸ்தா கோவில் நீர் தேக்க வளாகம்; வெற்றிலை வியாபாரியின் தணியாத ஆர்வம்

நாளடைவில் குடியிருப்புகள் பெருக்கம், விவசாய நிலமாக மாற்றுதல் போன்ற காரணங்களுக்கு பசுமையான மரங்கள் அகற்றப்பட்டு கட்டடங்களாக மாறி வருவதால் வெப்பநிலை அதிகரித்துள்ளது. இயற்கை சமநிலையை நம்மால் ஆன வழிகளில் செயல்படுத்த வேண்டும் எனில் ஒவ்வொரு மனிதனும் அமைப்பாக சேர்ந்து இதை முன்னெடுக்க வேண்டியது அவசியம். இப்பணியை 68 வயது வெற்றிலை வியாபாரி 30 வருடங்களாக தனது சொந்த வருவாயிலிருந்து ரூ.பல லட்சம் மதிப்பில் சாத்தியப்படுத்தி வருகிறார். ராஜபாளையம் அருகே தேவதானம் கிராமத்தை சேர்ந்த தலைமலை மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். கடந்த 23 ஆண்டுகளாக 5000க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை சுற்றியுள்ள கண்மாய் கரைகள், ரோட்டோரங்கள், அரசு அலுவலகங்களில் நட்டு பராமரித்து மரமாக்கியுள்ளார். இதில் நாவல், பனை, ஆல், அரசு, வேம்பு, புங்கை,மருதம், இலுப்பை, மா, கொடுக்காப்புளி போன்றவை முக்கிய இடம் பிடித்துள்ளது. மரக்கன்றுகளை வாங்கி, குழி தோண்ட, நீர் ஊற்ற, பராமரிக்க என குறைந்தது மூன்று ஆண்டுகள் கண்காணித்து வருகிறார். குழந்தை செல்வம் இல்லாத இவர் 33 வருடங்களாக தனது வியாபாரம் மூலம் வரும் வருவாய் முழுவதையும் மரங்களை வளர்க்க என வாழ்வையும் வருவாயையும் அர்ப்பணித்துள்ளார். இப் பகுதி நீர் நிலையை தேடி வரும் பறவைகளுக்கு தங்குமிடமாக மாறி உள்ளது. தற்போது தேவதானம் ஆஞ்சநேயர் கோயில் மேற்கே தேவதானம் கோயிலின் 10 ஏக்கர் பரப்பில் பனை விதைகள் நடும் பணி தொடங்கி உள்ளார். இவரது சேவையை பாராட்டி இந்திய அரசு, குஜராத், புது டில்லி மாநில அரசு, தமிழ்நாடு அரசு, மாவட்ட நிர்வாகம் என பல்வேறு தன்னார்வலர் அமைப்புகள் விருதுகள் வழங்கி பாராட்டியுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை