உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஸ்ரீவி., நகராட்சியில் குடிநீர், பொது சுகாதார வசதிகளை முறையாக பராமரிக்க அறிவுரை

ஸ்ரீவி., நகராட்சியில் குடிநீர், பொது சுகாதார வசதிகளை முறையாக பராமரிக்க அறிவுரை

ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் குடிநீர், பொது சுகாதார வசதிகளை முறையாக பராமரிக்க வேண்டும். அதிகாரிகள் பெயரளவில் செயல்படக் கூடாது. மக்களின் மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காண வேண்டுமென கலெக்டர் ஜெயசீலன் அறிவுறுத்தினார்.ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகத்தில் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது. நகராட்சி தலைவர் ரவி கண்ணன் முன்னிலை வகித்தார். கமிஷனர் நாகராஜ், மேனேஜர் பாபு, இன்ஜினியர் கோமதி சங்கர், கவுன்சிலர்கள், ரோட்டரி சங்க நிர்வாகிகள் வேலாயுதம், பால்ச்சாமி, சந்திரன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில் கலெக்டர் ஜெயசீலன் பேசுகையில், நகரில் சரியான நாட்களில், முறையான வகையில், போதிய அளவிற்கு குடிநீர் வழங்குவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். பஸ் ஸ்டாண்ட் உட்பட அனைத்து வார்டுகளிலும் உள்ள சுகாதார வளாகங்களை முறையாக பராமரிக்க வேண்டும். இதனை அதிகாரிகள் தினசரி கண்காணிக்க வேண்டும். பெயரளவில் செயல்படக்கூடாது.அனைத்து தெருக்களிலும் சேதமடைந்த ரோடுகளை மழைக்காலத்திற்கு முன்பு சீரமைக்க வேண்டும். பஸ் ஸ்டாண்டில் உள்ள கட்டணமில்லா சுகாதார வளாகத்தை இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும்.தற்போதைய சூழலில் 5 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் சப்ளை செய்தாலே சிறந்த நகராட்சியாகும். குடிநீர் சப்ளையில் தவறான தகவல் தெரிவிக்க கூடாது. பஜார் வீதி ஆக்கிரப்புகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்., என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ