அரசு பஸ்களில் பாடலுக்கு தடை
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனைகளில் இருந்து இயங்கும் பஸ்களில் பயணிகளை பாதிக்கூடிய அளவிற்கு அதிக ஒலியுடன் பாடல்கள் ஒலி பரப்புவதோடு சில பஸ்களில் கேலி, கிண்டல் செய்வது போலவும், இரட்டை அர்த்தங்களில் ஆபாச பாடல்கள், ஜாதிய ரீதியான பாடல்கள் ஒலி பரப்புவதாக புகார் எழுந்தது.இதையடுத்து டிரைவர், கண்டக்டர்களால் தன்னிச்சையாக வைக்கப்பட்டுள்ள ஸ்பீக்கர்கள், ஆடியோ சிஸ்டம்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழில்நுட்பத்துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.