உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  எஸ்.ஐ.ஆர்., பணிகள் புறக்கணிப்பு

 எஸ்.ஐ.ஆர்., பணிகள் புறக்கணிப்பு

விருதுநகர்: எஸ்.ஐ.ஆர்.,ல் உள்ள குளறுபடிகளை களைந்திடவும், போதிய கால அவகாசம் வழங்கவும், பணிச்சுமை, போதிய பயிற்சி அளிக்காதது போன்ற காரணங்களால் விருதுநகர் மாவட்டத்தில் 10 தாலுகாக்களிலும்வருவாய்த்துறை அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று எஸ்.ஐ.ஆர்., பணி புறக்கணிப்பு போராட்டம் நடந்தது. இந்நிலையில் வருவாய் கிராம ஊழியர், அலுவலக உதவியாளர்கள், வி.ஏ.ஒ.,க்கள், வருவாய் ஆய்வாளர்கள், துணை தாசில்தார்கள், தாசில்தார்கள் என பலர் பணி புறக்கணிப்பு செய்தனர். மாவட்டத்தில் இதுவரை 15 லட்சத்திற்கும் அதிகமாக படிவம் வழங்கப்பட்டு விட்டதால் பெரிய அளவில் பாதிப்பில்லை. இருப்பினும், இன்றும், நாளையும் ஓட்டுச்சாவடிகளில் முகாம்கள் நடப்பதால் பணி புறக்கணிப்பு செய்யும் பட்சத்தில் பூர்த்தி செய்த படிவத்தை அளிக்க வருவோர் சிரமப்படலாம்.இது பாதிப்பை ஏற்படுத்தலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி