சிவகாசி பி.எஸ்.ஆர்., பொறியியல் கல்லுாரிக்கு காப்புரிமை விருது
சிவகாசி: உலக அறிவுசார் காப்புரிமை தினத்தை முன்னிட்டு சென்னை அண்ணா பல்கலை சார்பில் சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லுாரிக்கு அறிவுசார் காப்புரிமை விருது வழங்கப்பட்டது.இந்த விருதுக்கு அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும் 563 பொறியியல் கல்லுாரிகள் தகுதி பெற்றன. இந்த விருதுக்கு தமிழக அளவில் சிவகாசி பி.எஸ்.ஆர்., பொறியியல் கல்லுாரி 388 காப்புரிமை தாக்கல் செய்து அதில் 42 காப்புரிமைகள் உரிமம் பெற்று, 12 கல்லுாரிகளில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டு விருது பெற்றுள்ளது. விருதினை சென்னை காப்புரிமை அலுவலகம் இணை கட்டுப்பாட்டு அதிகாரி தங்கபாண்டியன், சென்னை மாவட்ட வருவாய் அதிகாரி விஜயலட்சுமி, அண்ணா பல்கலை அறிவுசார் காப்புரிமை மையம் இயக்குனர் பாக்கிய வேணி வழங்கினர். விருது பெற்றமைக்காக கல்லுாரி தாளாளர் சோலைச்சாமி, இயக்குனர்கள் அருண்குமார், விக்னேஸ்வரி, முதல்வர் செந்தில்குமார், டீன் மாரிசாமி ஆகியோர் மாணவர்கள், பேராசிரியர்களை பாராட்டினர்.