உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சிவகாசி ரயில்வே பாலம் நாளை திறப்பு: 30 ஆண்டு கால கனவு நிறைவேறியது

சிவகாசி ரயில்வே பாலம் நாளை திறப்பு: 30 ஆண்டு கால கனவு நிறைவேறியது

சிவகாசி: சிவகாசி சாட்சியாபுரத்தில் கட்டப்பட்ட ரயில்வே பாலம் நாளை (நவ. 11) பயன்பாட்டிற்கு வருகிறது. காணொலி மூலம் முதல்வர் திறந்து வைக்க உள்ள நிலையில் சிவகாசி மக் களின் 30 ஆண்டு கனவுகள் நிறைவேறியது. சிவகாசி - ஸ்ரீவில்லிபுத்துார் ரோட்டில் சாட்சியாபுரம் ரயில்வே கிராசிங்கில் பாலம் அமைக்கும் பணிக்கு பெரியகுளம் கண்மாய் இரட்டைப் பாலம் முதல் சாட்சியாபுரம் பஸ் ஸ்டாப் நிறுத்தம் வரை 700 மீட்டர் நீளம், 12 மீட்டர் அகலத்தில் ரூ.61.74 கோடியில் 2024 ஜூலையில் அடிக்கல் நாட்டப்பட்டது. ரயில்வே தண்டவாளத்திற்கு கிழக்கு பக்கம் 11 துாண்கள், மேற்கு பக்கம் 6 துாண்கள் என மொத்தம் 17 துாண்கள் அமைக்கப்பட்டு மேம்பாலம் கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வந்தது. இரு மாதத்திற்கு முன்பு மேம்பால பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் தங்கம் தென்னரசு, திட்ட காலத்துக்கு முன்னதாகவே நவ., இறுதியில் மேம் பாலம் பயன்பாட்டுக்கு வரும் என தெரிவித்தார். அதன்படி தொடர்ந்து பணிகள் நடந்து வந்த நிலையில் பெரியகுளம் கண்மாய் கரையில் பாலம் ஏறும் இடத்தில் நான்கு ரோடு சந்திக்கும் இடத்தில் ரவுண்டானா அமைக்கும் பணி, பாலத்தில் பெயிண்டிங் வேலை, தார் ரோடு அமைக்கும் பணி நடந்தது. தற்போது பாலம் அமைக்கும் பணிகள் முழுமையாக முடிவடைந்த நிலையில் நாளை முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலமாக திறந்து வைக் கிறார். இதனால் சிவகாசி மக்களின் 30 ஆண்டு கால கனவுகள் நிறைவேறியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ