உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நெசவாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

நெசவாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்ட கூட்டுறவு சங்க நெசவாளர்களுக்கு, இந்திய அரசின் ஜவுளி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நெசவாளர் சேவை மையம் மூலம், சமர்த் திட்டத்தின் கீழ், செப். 19 முதல் 45 நாட்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி நடக்கிறது. இதில் 20 நெசவாளர்களுக்கு செட்டிநாடு சேலைகள் உற்பத்தி செய்வதற்கான பயிற்சியும், பயிற்சி காலத்தில் தினசரி 300 ரூபாய் உதவித்தொகையும் வழங்கப்பட உள்ளது. பயிற்சி முடிந்த நெசவாளர்கள் அவர்கள் சார்ந்துள்ள சங்கங்களின் மூலம் செட்டிநாடு பருத்திச் சேலை உற்பத்தியை மேற்கொள்வர். நெசவாளர்களும் புதிய ரக சேலைகளை உற்பத்தி செய்வதால் அதிக கூலி கிடைக்கும். இந்த திட்டத்தின் துவக்க விழா ஏ. 1252 அருப்புக்கோட்டை நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் நடந்தது. கைத்தறி உதவி இயக்குனர் சேரன் துவக்கி வைத்தார். நெசவாளர்களுக்கு பயிற்சி உபகரணங்கள் வழங்கப்பட்டது. கண்காணிப்பாளர் விஸ்வேஸ்வரன், நெசவாளர் சேவை மைய அலுவலர் ஹரிஹரன், நெசவாளர் சங்கங்களின் மேலாளர்கள் கலந்து கொண்டனர். ____


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்