சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
சாத்துார்: சாத்துார் சடையம்பட்டி ஷீரடி சாய்பாபா கோயில் வியாழக்கிழமையை முன்னிட்டு நேற்று சிறப்பு பூஜை நடந்தது. காலை முதல் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரத்துடன் ஆரத்தி எடுக்கப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது. சாத்துார் மற்றும் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டனர்.