உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மெப்கோ கல்லுாரியில் விளையாட்டு விழா

மெப்கோ கல்லுாரியில் விளையாட்டு விழா

சிவகாசி: சிவகாசி மெப்கோ ஸ்லெங்க் பொறியியல் கல்லுாரியில் 41 வது ஆண்டு விளையாட்டு விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் அறிவழகன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக கல்லுாரி முன்னாள் மாணவர் சென்னை எரிக்சன் குளோபல் கம்பெனி நிர்வாகி வருண் டிமிட்ரோ பங்கேற்று பேசினார்.கல்லுாரி மாணவர்களுக்கு நடந்த விளையாட்டு போட்டிகளில் ஓட்டப்பந்தயம் தொடர் ஓட்டம் நீளம் தாண்டுதல் உயரம் தாண்டுதல் தட்டி எறிதல் குண்டு எறிதல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. கூடைப்பந்து வலைப்பந்து, கிரிக்கெட் டேபிள் டென்னிஸ் குழு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு கோப்பை வழங்கப்பட்டது. பார்வையாளர்கள் சிறப்பு விருந்தினர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ