நாய்கள் கடித்து புள்ளிமான் பலி
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் செண்பகத்தோப்பு வள்ளலார் இல்லம் மலையடிவாரப் பகுதியில் 3 வயது பெண் புள்ளிமான் நாய்கள் கடித்து நேற்று காலை உயிரிழந்து கிடந்தது.ஸ்ரீவில்லிபுத்துார் வனச்சரகர் செல்வமணி தலைமையிலான குழுவினர் இறந்து கிடந்த மானை மீட்டனர். கால்நடை டாக்டர் குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் மான் அடக்கம் செய்யப்பட்டது.